ஞாயிறு, 14 மார்ச், 2010

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி "திரில்' வெற்றி பெற்றது. 37 பந்துகளில் அதிரடி சதம் விளாசிய ராஜஸ்தான் அணி வீரர் யூசுப் பதானின் சதம் வீணானது.
மூன்றாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்., ) கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. தொடரின் 2 வது போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன் அணி, வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. "டாஸ்' ஜெயித்த சச்சின் பேட்டிங் தேர்வு செய்தார்.
சூப்பர் ஜோடி: மும்பை அணிக்கு சச்சின் (17), ஜெயசூர்யா (23) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. டாரே (23) ஆறுதல் அளித்தார். பின்னர் 4 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராயுடு (55), சவுரப் திவாரி (53) ஜோடி பொறுப்புடன் ஆடியது. அடுத்து வந்த ஹர்பஜன் (8), டைட் பந்து வீச்சில் காலில் காயம் அடைந்து "ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் மெக்லாரன் (11) தனது பங்கிற்கு 2 பவுண்டரிகள் விளாச, 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.
யூசுப் விளாசல்:கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு, அஸ்னோத்கர் (0), நமன் ஓஜாவும் (12), ஜுன்ஜுன்வாலா (14) பெரிதாக சாதிக்க வில்லை. ஸ்மித் (26) ஆறுதல் அளித்தார். பின்னர் களமிறங்கிய யூசுப் பதான், ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். இவருடன் இணைந்த டோக்ரா நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். 8 சிக்சர் 9 பவுண்டரிகளை விளாசிய யூசுப் பதான், ஐ.பி.எல்., அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆனால் அடுத்த பந்திலேயே துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டாக, ராஜஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
"திரில்' வெற்றி: கடைசி 2 ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை ஜாகிர் வீசினார். கட்டுக்கோப்பாக வீசிய ஜாகிர், 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. மலிங்கா பந்து வீசினார். முதல் பந்தில் டோக்ரா (41) ரன்-அவுட்டானார். 2 வது பந்தில் உனியல் (0) போல்டானார். 3 பந்தில் 1 வார்ன் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 4 வது பந்தில் 2 ரன், 5 வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட, கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. மஸ்காரனாஸ் எதிர்கொண்டார். ஆனால் மலிங்கா துல்லியமாக பந்து வீச, 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 7 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் கைப்பற்றினார்.

அதிவேக சதம்மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யூசுப் பதான். இதன் மூலம் ஐ.பி.எல்., அரங்கில் குறைந்த பந்துகளில் சதம் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார். இப்பட்டியலில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் அணி பந்துகள் ஆண்டு இடம்
யூசுப்பதான் ராஜஸ்தான்ராயல்ஸ் 37 மும்பை
கில்கிறிஸ்ட் டெக்கான் சார்ஜர்ஸ் 42 மும்பை
ஜெயசூர்யா மும்பை இந்தியன்ஸ் 45 மும்பை
* உள்நாட்டு "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர்களில், இப்பெருமை எட்டிய 2 வது வீரர் என்ற சாதனை படைத்தார் யூசுப். இப்பட்டியலின் முதலிடத்தில் சைமண்ட்ஸ் உள்ளார். கடந்த 2004 ம் ஆண்டு மெய்ட்ஸ்டோனில் நடந்த ஒரு போட்டியில் கென்ட் அணி சார்பில் களமிறங்கிய இவர் 34 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் = டெக்கான் சார்ஜர்ஸ்

நேற்று நடந்த ஐ . பி . எல் டுவென்டி 20 போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி  பெற்று உள்ளது . மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் ஐ . பி . எல் டுவென்டி 20 போட்டியில் இந்த முறையும் நல்ல பரபரப்பும் , சுவாரஸ்யமும் இருக்கும். அதிரடிக்கு பஞ்சம் இருக்காது . 


முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றது.  மும்பையில் நடந்த ஐ.பி.எல் முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின. 

 


கொல்கத்தா அணியில் மனோஜ்திவாரி, கங்குலி முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் அரங்கு திரும்பினார்கள் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர்கள் ஏமாற்றம் அளித்தனர் .  
 
 இதனால் தொடக்கமே சரிவு ஏற்பட்டது .  பின்னர் ஹாட்யும் , புஜாராவும்  மெதுவாக ரன்கள் சேர்த்து கொண்டு இருந்தனர் . புஜாரா 10 ரன்கள் எடுத்திருந்த போது ஆர். பி. சிங் வீசிய பந் தில் ஓஜாவிடம் பிடி கொடுத்து அவுட் ஆனார் . ஹாட்ஜ் 13 ரன்கள் எடுத்திருந்த போது அவரும் அவுட் ஆனார் .

பின்னர் வந்த ஷாவும் , மத்தியுசும் நிதானமாகவும் , பொறுப்புடனும் நின்று விளையாடி ஸ்கோரை மிகவும் உயர்த்தினார்கள் . இறுதியில்
4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள்  எடுத்தனர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் .
மத்தியுஷ் 46 பந்துகளில் 65 எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஷா  46 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். டெக்கான் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை  தழுவியது. கில்கிறிஸ்ட் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். கில்கிறிஸ்ட் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். ஏனையோர் பெரிதும் பிரகாசிக்கவில்லை. லக்ஷ்மண் 22 எடுத்தார் . இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது .

போட்டியின் சிறப்பாட்டக்காரராக மத்தியுஷ் தெரிவாகினார்.
மும்பை இண்டியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப் பரீட்சை நடத்தவுள்ளன .

புதன், 24 பிப்ரவரி, 2010

இரட்டை சதம் அடித்து சச்சின் சாதனை






குவாலியர்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இரட்டை சதமடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி குவாலியரில் இன்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (9) ஏமாற்றினார். பின்னர் இணைந்த சச்சின், தினேஷ் கார்த்திக் ஜோடி, மளமளவென ரன்கள் குவித்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேர்த்த போது, கார்த்திக் (79) அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் (36) அதிரடியாக ஆடினார்.
பின்னர் இணைந்த சச்சின், கேப்டன் தோனி ஜோடி இந்திய அணியின் இமாலய ஸ்கோருக்கு வித்திட்டது. அபாரமாக ஆடிய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தோனி (68) அரைசதமடித்து அசத்தினார். இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 401 ரன்கள் குவித்தது. சச்சின் (200), தோனி (68) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பார்னல் 2, மெர்வி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
புதிய சாதனை:
குவாலியர் ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்த, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். முன்னதாக ஜிம்பாப்வேயின் சார்லஸ் கோவன்ட்ரி (194*), பாகிஸ்தானின் சயீத் அன்வர் (194) அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகித்தனர். தவிர, ஒருநாள் அரங்கில் அதிக சதம் (47 சதம்), அதிக ரன்கள் (17598 ரன்) எடுத்த வீரர்கள் வரிசையில், சச்சின் முதலிடத்தில் நீடிக்கிறார்.

நன்றி . தினமலர்

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

முதல் முறையாக "நம்பர்-1' இடம்





மும்பை: மும்பை டெஸ்டில் சூப்பராக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. தவிர தனது டெஸ்ட் வரலாற்றில் 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. ஆட்ட, தொடர் நாயகன் என விருதுகளையும் சேவக் வென்றார்.


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது.


பின்னர் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜாகிர் வேகத்தில் மிரட்ட, இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இன்னிங்ஸ், 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர 1932ல் டெஸ்ட் விளையாட துவங்கிய இந்திய அணி, 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடம் பெற்றது. தற்போது இந்தியா 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்கா உள்ளது.
இப்போட்டியில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
---------------------
கனவு நனவானது: தோனி
"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.
--------
ஜனாதிபதி பாராட்டு
டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர், தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.
--------
கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:
முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

india vs new zealand
















11/09/2009

கொழும்பு:நெஹ்ரா, யுவராஜ் பந்து வீச்சில் அசத்த, இந்திய அணி நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் முத்தரப்பு தொடரின் பைனலுக்கு சூப்பராக முன்னேறியது. பைனலில் இலங்கை அணியை சந்திக்கிறது. அடுத்தடுத்து இரண்டு லீக் போட்டி களில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, தொடரிலிருந்து பரிதாப மாக வெளியேறியது.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் இரண்டாவது லீக் போட்டி யில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர் கொண்டது. முன்னதாக முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்திருந்த நியூசி லாந்து அணி, கட்டாய வெற்றியை எதிர் நோக்கி களமிறங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி பேட்டிங் தேர்வு செய்தார்.

மிரட்டல் வேகம்:மெக்கலம், ரைடர் நியூசி லாந்து அணிக்கு துவக்கம் தந்தனர். நெஹ்ரா வேகத்தில் அனல் பறந்தது. ரைடர் டக் அவுட்டானார். மெக்கலம் (3) ஏமாற்ற, துவக்கத்திலேயே தடுமாறியது நியூசிலாந்து. டெய்லர் (11) ஏமாற்றி னார்.

யுவராஜ் அசத்தல்:பின்னர் சுழலில் மிரட்டிய யுவராஜ், கப்டில் (22), எலியட் (22) இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக் கினார். மிடில் ஆர்டரில் ஆல்-ரவுண்டர் ஓரம் (24), புரூம் (21) நம்பிக்கை அளிக்க தவறினர். வெட்டோரி (25) ஆறுதல் அளித்தார். டெயிலெண்டர் களான மில்ஸ் (6), பட்லர் (6) சொற்ப ரன்களில் அவுட்டாக, 46.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 155 ரன்கள் எடுத்தது.

சச்சின் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி, துவக்க வீரர் தினேஷ் கார்த்திக் (4) விக்கெட்டை விரைவில் இழந்தது. பின்னர் சச்சின், டிராவிட் ஜோடி சேர்ந் தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தது. சச்சின் அதிரடி காட்ட, டிராவிட் படுமந்தமாக ஆடினார். இந்த ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டிராவிட் (14) அவுட்டானார். மறுமுனை யில் 6 பவுண்டரிகளை விளாசிய சச்சின் (46) அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
சூப்பர் ஜோடி: அடுத்து வந்த யுவராஜ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற் றினார். பின்னர் வந்த ரெய்னா, சூப்பர் சிக்சர் அடித்து தனது ஆட்டத்தை துவக்கினார். இவருடன் இணைந்த கேப்டன் தோனி சிறப்பாக ஆடி னார். இவர்களது பொறுப் பான ஆட்டம் கை கொடுக்க, இந்திய அணி 40.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . தோனி(35), ரெய்னா (45) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை நெஹ்ரா வென்றார்.

பைனல் வாய்ப்பு: முத்தரப்பு தொடரின், முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, நேற்றும் ஏமாற்றியதால் பைனல் வாய்ப்பை இழந்தது. ஒரு லீக் ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, இலங்கையுடன் வரும் 14 ம் தேதி பைனலில் மோத உள்ளது. இதனால் இன்று நடக்கும் இலங்கை, இந்தியா இடையிலான லீக் போட்டி அதிக முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது.

நெஹ்ரா "100':நேற்றைய போட்டியில், நியூசிலாந்தின் மெக்கலமை அவுட்டாக்கிய ஆசிஷ் நெஹ்ரா, ஒரு நாள் அரங்கில் 100 வது விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதுவரை 77 போட்டிகளில் இவர் 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, இந்த இலக்கை எட்டும் 13 வது இந்தியர் என்ற பெருமை பெற்றார் நெஹ்ரா. * இந்திய துவக்க வீரர் தினேஷ் கார்த்திக்கை நேற்று அவுட் செய்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மில்ஸ், ஒரு நாள் அரங்கில் 150 வது விக்கெட்டை கைப்பற்றினார்.

29,500 ரன் நியூசிலாந்துக்கு :எதிரான நேற்றைய போட்டியில், 43 ரன்கள் எடுத்த போது சச்சின் புதிய மைல் கல்லை எட்டினார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என இரண்டிலும் சேர்த்து 29,500 ரன்கள் குவித்தார். இதுவரை டெஸ்டில் 12773, ஒரு நாள் அரங்கில் 16730 ரன்கள் குவித்துள்ளார் சச்சின்.

சனி, 2 மே, 2009

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் , பஞ்சாப் அணி

கும்ளே அணி வெற்றி:
யுவராஜ் "ஹாட்ரிக்' வீண்

நெஞ்சம் படபடத்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவரை கலக்கலாக வீசிய பிரவீண் குமார் வெற்றிக்கு வித்திட்டார். பஞ்சாப் சார்பில் கேப்டன்யுவராஜின் "ஹாட்ரிக்' சாதனை, அதிரடி அரைசதம் வீணானது.தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

நேற்று இரவு டர்பனில் நடந்த 24வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சால ஞ்ர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கும்ளே, பேட்டிங் தேர்வு செய்தார்.துவக்கம் மோசம்: பெங்களூரு அணி மோசமான துவக்கம் கண்டது. இர்பான் பதான் வீசிய முதல் ஓவரிலேயே ஜெசி ரைடர்(2) அவுட்டானார். யுவராஜ் அபாரம்: இதற்கு பின் யுவராஜ் அசத்தினார். 12வது ஓவரின் 5வது பந்தில் உத்தப்பாவை(19)வெளியேற்றினார். 6வது பந்தில் காலிஸ்(27) போல்டானார். இவரது அடுத்த ஓவரின்(14வது) முதல் பந்தில் அனுபவ பவுச்சர்(2) எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டாக, "ஹாட்ரிக்' சாதனை படைத்தார். வாண்டர் மெர்வி 35 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது.

அதிரடி அரைசதம்:
சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் யுவராஜ், கோயல் இணைந்து சூப்பர் துவக்கம் தந்தனர். வழக்கம் போல சிக்சர் மழை பொழிந்த யுவராஜ் 50 ரன்களுக்கு(3 பவுண்டரி, 4 சிக்சர்) கும்ளே சுழலில் அவுட்டானார். கோயல் 20 ரன்கள் எடுத்தார். கேடிச்(3), ஜெயவர்தனா(19), சங்ககரா(17) அதிக நேரம் நீடிக்கவில்லை.6 பந்தில் 13 ரன்: கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. பிரவீண் குமார் பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்தில் இர்பான் பதான் பவுண்டரி அடித்தார். 3வது பந்தில் ரன் இல்லை.நான்காவது பந்தில் இர்பான்(12) அவுட் டானார். ஐந்தாவது பந்தில் சாவ்லா(3)போல்டானார். 6வது பந்தில் ரன் எடுக்க இயலவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து பரிதாப தோல்வி அடைந்தது. புதிய கேப்டன் கும்ளே, பெங்களூரு அணிக்கு வெற்றிப் பாதையை காட்டியுள்ளார். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் தட்டிச் சென்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , மும்பை இந்தியன்ஸ்






ஐபிஎல் கிரிக்கெட்:
மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 139 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில், சச்சின் தெண்டுல்கர் 34 ரன்களும் ஹர்பஜன் சிங் 6 ரன்களும் எடுத்தனர். டூமினி 52 ரன்களுடனும் ஜாகீர்கான் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், ஹோட்கே 78 ரன்கள் எடுத்து அணியின் ரன்குவிப்புக்கு பலம் சேர்த்தார். எனினும், 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 139 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.