வியாழன், 5 பிப்ரவரி, 2009

இந்தியா இலங்கை 2009 ஜனவரி - 4







கொழும்பு:
கொழும்பில் இன்று நடந்து முடிந்த 4-வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணியை அபாரமாக வீழ்த்தியது, இந்திய அணி.

தோனி தலைமையிலான இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

அந்த அணியில் அதிகபட்சமாக சங்ககாரா 56 ரன்களையும், குலசேகர கடைசி வரை ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் சேர்த்தார்; தில்ஷான் 38 ரன்களையும் எடுத்தனர்; ஜெய்வர்த்தனே மற்றும் மஹரூப் ஆகியோர் தலா 28 ரன்கள் சேர்த்தனர். ஜெயசூர்யா 27 ரன்கள் எடுத்தார்; கபுகேதரா 16 ரன்களையும், கண்டம்பி 10 ரன்களையும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் இர்பான் பதான் 3 விக்கெட்டுகளையும், பிரவிண் குமார் மற்றும் சேவாக் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், யூசுப் பதான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கல்வீச்சால் சலசலப்பு!
இலங்கை அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்ததிருந்த போது, பவுண்டரி லைனில் இருந்த இந்திய ஃபீல்டர் மீது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து கல் வீசப்பட்டன
இதையடுத்து, மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். பின்னர், இந்திய கேப்டன் தோனியும், இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனேவும் நடுவர்களிடையே ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து 27 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.

கம்பீர், தோனி அபாரம்!

முன்னதாக, இந்தியா டாசில் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வீரேந்திர சேவாக் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குலசேகரா பந்துவீச்சில் ஜெயசூர்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் கவுதம் காம்பீரும் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இணைந்து இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தனர்.
96 பந்துகளை சந்தித்த தோனி 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 94 ரன்கள் எடுத்து ஜெயசூர்யா பந்துவீச்சில் பெர்ணாண்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

முந்தைய போட்டியில் சதம் அடித்து அதிரடியாக ஆடிய யுவராஜ், இன்றைய போட்டியில் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த பதான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார்.
எனினும் கவுதம் காம்பீர் தனது கம்பீரமான ஆட்டத்தால் இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார். 14 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்த கம்பீர் 147 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் இலங்கை மண்ணில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கவுதம் காம்பீர் பெற்றார்.
சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 332 ரன்களை குவித்தது.
இலங்கை தரப்பில் கபுகேதரா 3 விக்கெட்டுகளையும், முரளிதரன் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றின.
இந்தப் போட்டியில், 150 ரன்கள் குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்த கவுதம் கம்பீர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றிய நிலையில், இன்றைய வெற்றியின் மூலம் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி, வரும் 8-ம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது.

தோனி அணி சாதனை!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு புதிய சாதனையாக அமைந்தது.
இலங்கை தொடருக்கு முன்பாக இங்கிலாந்துடன் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. தற்போது இலங்கையுடன் பெற்ற வெற்றிகளையும் சேர்த்து தொடர்ச்சியாக 9 ஒருநாள் ஆட்டங்களில் வெற்றியை ருசித்து இருக்கிறது.

இந்திய அணி கடைசியாக 2006-ம் ஆண்டு டிராவிட் தலைமையில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், அதற்கு மேல் அந்த வெற்றி பயணம் நீண்டது கிடையாது.
எனவே, இன்றைய வெற்றியால் தோனி தலைமையிலான இந்திய புதிய சாதனை படைத்தது.

முதலிடம் நோக்கி...

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றால், ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவை முந்திக் கொண்டு இந்தியா முதலிடம் பெற வாய்ப்புள்ளது.

இலங்கை சுழற்புயல் முரளிதரன் உலக சாதனை!

கொழும்பில் நடந்து முடிந்த போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் இலங்கை மண்ணில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற கவுதம் கம்பீர் விக்கெட்டை சாய்த்ததன் மூலம் இந்த சாதனையை முரளீதரன் படைத்தார்.
ஒரு நாள் போட்டிகளில் 502 விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சமன் செய்த முரளீதரன் இன்று கம்பீரின் விக்கெட்டை சாய்த்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் 769 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள முரளீதரன், ஒருநாள் போட்டிகளிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கடந்த 1993-ம் ஆண்டு அறிமுகமான முத்தையா முரளீதரன் இதுவரை 328 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.





செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

இந்தியா இலங்கை 2009 ஜனவரி - 3 வது போட்டி

மூன்று முறை தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்த சச்சின்

வெற்றி களிப்பில்

ஜகீர்







சாதனை ஜோடி



மூன்றாவது போட்டி 3/2/2009

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவுசெய்தது
பெர்னாண்டோ வீசிய 2வது ஓவரிலேயே அதிர்ச்சி. முதல் பந்தை இவர் "நோ-பாலாக' வீச, "பிரி-ஹிட்' வாய்ப்பில் சச்சின் "சூப்பராக' சிக்சர் அடித்தார். 6வது பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் வெறும் 7 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த காம்பிருக்கு அதிர்ஷ்டம் இல்லை. முதலில் இவர் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை கண்டம்பி நழுவிட, கண்டம் தப்பினார். சிறிது நேரத்தில் சேவக் அடித்த பந்தை பெர்னாண்டோ லேசாக தொட்டு விட, "கிரீசை' விட்டு வெளியே நின்ற காம்பிர்(10) பரிதாபமாக ரன் அவுட்டானார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து இருந்தது.

சாதனை ஜோடி:

இதற்கு பின் சேவக், யுவராஜ் இணைந்து தூள் கிளப்பினர். இவர்களது அதிரடியில் முரளிதரன், மெண்டிஸ் உள் ளிட்ட அனைத்து இலங்கை பவுலர்களும் திணறிப் போயினர். குலசேகரா வீசிய 9வது ஓவரில் சேவக் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். தன் பங்குக்கு மகரூப் வீசிய 16வது ஓவரில் யுவராஜும் "ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் எகிறியது. இருவரும் சதம் கடந்து அசத்தினர். ஒரு நாள் அரங்கில் 11வது சதம் அடித்த யுவராஜ் 117 ரன்களுக்கு(17 பவுண்டரி, 1 சிக்சர்) முரளிதரன் சுழலில் வீழ்ந்தார். தனது 10வது சதம் கடந்த சேவக் 116 ரன்களுக்கு(17 பவுண்டரி) ரன் அவுட்டானார். ரெய்னா(9) ஏமாற்றினார்.

யூசுப் அதிரடி:
கடைசி கட்டத்தில் தோனி, யூசுப் பதான் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப் புக்கு 363 ரன்கள் எடுத்தது.
யூசுப் 59(4 பவுண்டரி, 3 சிக்சர்),
தோனி 35 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை திணறல்:
மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஜெயசூர்யா(0), பிரவீண் குமார் வேகத் தில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். தில்ஷன்(30), கேப்டன் ஜெயவர்தனா(30), கண்டம்பி(10), கபுகேதரா(2) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சங்ககரா அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார்.

இலங்கை அணி 41.4 ஓவரில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.


முரளிதரன் சாதனை :
இன்று யுவராஜை வெளியேற்றிய இலங்கையின் "சுழல் மன்னன்' முரளிதரன் தனது 502வது விக்கெட்டை(327வது போட்டி) பெற்றார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியிருந்த பாகிஸ்தானின் அக்ரம்(502 விக்., 356 போட்டி) சாதனையை சமன் செய்தார்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

இந்தியா இலங்கை 2009 ஜனவரி - 2வது போட்டி

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது...
இலங்கை பிரேமதாச விளையாட்டரங்கில் இரவுபகலாட்டமாகவிருக்கிறது...
இலங்கையணிக்கு சாதகமான மைதானம் என்றாலும் இந்தியாவின் துடுப்பாட்டம் சிறந்தமுறையில் உள்ளது...

.இந்திய அணி
G Gambhir, V Sehwag, SR Tendulkar, Yuvraj Singh, SK Raina, MS Dhoni, YK Pathan, P Kumar, Z Khan, PP Ojha, I Sharma

இலங்கை அணி
ST Jayasuriya, TM Dilshan, KC Sangakkara, DPMD Jayawardene, CK Kapugedera, SHT Kandamby, MF Maharoof, T Thushara, KMDN Kulasekara, M Muralitharan, BAW Mendis


இந்தியா

256 / 9 , 50 ஓவர்
சச்சின் 6 அவுட்
கம்பீர் 27 அவுட்
சேவாக் ரன் அவுட் 42 ரன் 26 பந்துகளில்
ரெய்னா அவுட் 29 ரன் 49 பந்து
யுவராஜ் சிங் 63 ரன் 84 பந்துகளில்
தோணி - 23 அவுட்
யூசுப் பதான் - 21 அவுட்



இலங்கை
241 / 10
கண்டம்பீ - 93 நாட் அவுட்
ஜெயவர்தனே - 52 அவுட்
கப்புகேத்ரா - 31 அவுட்

15 ரன் வித்தியாசத்தில் வெற்றி
தொடர் 2-0 இந்தியா








மீண்டும் தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்த சச்சின்



ஆட்ட நாயகன் - இசாந்த் சர்மா ( இந்தியா)