புதன், 29 ஏப்ரல், 2009

T20 இளைஞர்களுக்கான கிரிக்கெட் மட்டுமா? சச்சின் கேள்வி

அதிவேக கிரிக்கெட் வடிவமாகிய இருபதுக்கு 20 கிரிக்கெட் ஆட்டம் இளைஞர்களுக்கான கிரிக்கெட் மட்டுமே என்று கூறுபவரகளுக்கு கிரிக்கெட்டை அதிகம் தெரியாது என்று தான் கருதுவதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அவர் இது பற்றி விலாவாரியாக பேசியுள்ளார்."இது இளைஞர்களுக்கான கிரிக்கெட் என்று யார் கூறினார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இது போன்று கூறுபவருக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியவில்லை என்பது தெளிவு. இது கிரிக்கெட் வீரர்களுக்கான ஆட்டம் எனவே இதில் இளைஞர், முதியவர் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது" என்று அனல் கக்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.தனது 36-வது பிறந்த நாளை சில தினங்களுக்கு முன் கொண்டாடிய சச்சின் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிரடி ஃபார்மில் உள்ளார் இதுவரை 163 ரன்களை 80 ரன்கள் என்ற சராசரியில் குவித்துள்ளார் சச்சின்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ்








கொல்கத்தா மீண்டும் தோல்வி
டர்பனில் நடைபெர்ற்ற ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயித்த 139 ரனகள் இலக்கை எதிர்த்து பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரனகள் எடுத்து வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் வான் விக் அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.முதல் ஓவரை கெவின் பீட்டர்சன் வீசியது ஆச்சரியம் என்றால் அவர் வீசிய சாதாரண வெளுத்துக் கட்ட வேண்டிய பந்தை அதிரடி மன்னன் பிரண்டன் மெக்கல்லம் நேராக பாயிண்ட் ஃபீல்டர் கையில் கேட்ச் கொடுத்தது அதைவிட அதிசயமாக இருந்தது.அதன் பிறகு கிறிஸ் கெய்ல், பிராட் ஹாட்ஜ் அதிரடி ஆட்டம் ஆடினர். 35 பந்துகளில் இருவரும் 45 ரனகளை சேர்த்தனர். அப்போது பிராட் ஹாட்ஜ் 17 ரன்கள் எடுத்து கும்ளேயிடம் வீழ்ந்தார்.கங்கூலி 8 பந்துகள் திணறொ திணறென்று திணறி 1 ரன் எடுத்து தனக்கு வராத புல் ஷாட்டை ஆடி கேட்ச் கொடுத்தார்.கிறிஸ் கெய்ல் 37 பந்துகளில் 40 ரனகள் எடுத்து ஆட்டமிழந்தபோது 12வது ஓவரில் 70/4 4என்று ஆனது கொல்கத்தா அணி. அதன் பிறகு வான் விக்கும், சாஹாவும் அணியின் எண்ணிக்கையை மெல்ல 110 ரன்களுக்கு உயர்த்தினர். சஹா ஒரு சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்ததாக சுக்லாவும் ஆட்டமிழந்தார். கொல்கட்டா அணி 20 ஓவர்களில் 139 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் பீட்டர்சன் 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். மீண்டும் அனில் கும்ளே 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.தனது இனிங்ஸை தொடங்கியா பெங்களூர் ராயல் சலஞ்சஸ் அணியின் துவக்க வீரர் எஸ்.பி.கோஸ்வாமி 43 ரன்களை குவித்தார். காலிஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 11 ஓவர்களில் 69 ரன்களைச் சேர்த்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.கெவின் பீட்டர்சன் 13 ரன்களையும் வீரத் கோலி 19 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தபோது 16 ஓவர்களில் 107/4 என்று சற்றே பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டது. பிராட் ஹாட்ஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அதன் பிறகு ஆட்டம் நெருக்கமாக சென்றது. 19-வது ஓவரில் 130/5 என்று இருந்தது. பீட்டர்சன் ஆட்டமிழந்த பிறகு மார்க் பவுச்சரும் வான் டெர் மெர்வும் 17 பந்துகளில் 22 ரன்களைச் சேர்த்தனர்.அப்போது 9 ரன்கள் எடுத்த மெர்வ் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை தோன்றியது. இந்த நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் கடைசி ஓவரை கெய்ல் வீசினார். பௌச்சர் 2 பவுண்டரிகளை விளாசி வெற்றி பெற வைத்தார். பௌச்சர் 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து வெற்றி பெற செய்தார்.இதன் மூலம் பெங்களூர் அணி இந்த ஐ.பி.எல்-இல் 2-வது வெற்றியை ஈட்டியுள்ளது. இஷாந்த் ஷர்மா சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக பௌச்சர் தேர்வு செய்யப்பட்டார்.



மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்








பஞ்சாப் அணி 3 ரன்னில் வெற்றி
ஐ.பி.எல்., தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் யுவராஜின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி வாய்ப்பை வீணாக்கியது.






தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. டர்பனில் நேற்று இரவு நடந்த 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.






துவக்கம் மோசம்: பஞ்சாப் அணி திணறல் துவக்கம் கண்டது. கோயல் (12), போபரா(6) விரைவில் வெளியேறினர். கேப்டன் யுவராஜ்(10) மீண்டும் ஏமாற்றினார். ஜெயசூர்யா சுழலில் ஜெயவர்தனா(7) சிக்க, 4 விக்கெட்டுக்கு 52 ரன் எடுத்து தத்தளித்தது. உறுதியாக போராடிய சங்ககரா அணியை மீட்டார். கடைசி கட்டத்தில் ஜாகிர், மலிங்கா விக்கெட் வீழ்த்தியதோடு ரன்களையும் விட் டுக் கொடுக்கவில்லை. இதனால் ரன் விகிதம் குறைந்து போனது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டும் எடுத்தது. சங்ககரா(45) அவுட்டாகாமல் இருந்தார்.






சச்சின் ஏமாற்றம்: போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணி படுமோசமான துவக்கம் கண்டது. இர்பான் வீசிய முதல் பந்திலேயே ஜெயசூர்யா(0) அவுட்டானார். மாலிக் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் சச்சின்(1) வெளியேறினார். தவான் (3), பிராவோ(15) ஏமாற்ற, 4 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதற்கு பின் டுமினி, அபிஷேக் நாயர் இணைந்து போராடினர். நாயர் 15 ரன்கள் எடுத்தார். டுமினி அரைசதம் கடந்தார்.6 பந்தில் 12 ரன்: கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் மும்பை அணி வெற்றி என்ற பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.அப்துல்லா அற்புதமாக பந்துவீசினார். முதல் 3 பந்தில் 5 ரன்கள் எடுக்கப் பட்டது. 4வது பந்தில் டுமினி 59 ரன்களுக்கு அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது. மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து பரிதாப தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சங்ககரா தேர்வு



செய்யப்பட்டார்

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

டெல்லி , ராஜஸ்தான் ஏப்ரல் 28

யூசுப் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான்அதிரடியாக அரைசதம் கடக்க, நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.தென் ஆப்ரிக்காவில் 2வது ஐ.பி.எல்.,”டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

நேற்று நடந்த 18 வது லீக் போட்டியில் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சேவக்கின் டில்லி டேர்டெவில்சை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டில்லி அணி, பேட்டிங் தேர்வு செய்தது.டிவிலியர்ஸ் அரை சதம்: டில்லி அணிக்கு துவக் கத்தில் காம்பிர் (8), சேவக் (16) ஏமாற்றினர். அடுத்து வந்த டிவிலியர்ஸ் பொறுப் புடன் ஆடினார்.
ஆனால் இவருக்கு மிடில் ஆர்டர் வீரர்களான தில்ஷன் (7), தினேஷ் கார்த்திக் (4)ஒத்துழைப்பு தரவில்லை. 1 சிக்சர் 5 பவுண்டரி உட்பட அரை சதம் பதிவு செய்த டிவிலியர்ஸ் (50) ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வெட்டோரி (29), மன்காஸ் (23*) ஆறுதல் அளிக்க, டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
மிஸ்ரா மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, குய்னே (4) விக்கெட்டை விரைவில் இழந்தது.
சுழற் பந்து வீச்சில் மிரட்டிய டில்லி வீரர் அமித் மிஸ்ரா, பால் வால்தட்டி (1), ரவீந்திர ஜடேஜா (16), வார்ன் (0) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி, ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
பதான் வாணவேடிக்கை: ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் பார்முக்கு திரும்பிய ஸ்மித் பொறுப்புடன் ஆடினார்.
இவருடன் இணைந்த யூசுப் பதான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். சிக்சர்களாக விளாசித் தள்ளிய யூசுப் வெற்றிநாயகனாக ஜொலித்தார்.
ராஜஸ்தான் அணி 18.3ஓவரில் 147 ரன்கள் அடித்து வெற்றியை எட்டியது. ஸ்மித் 44, யூசுப் பதான் 62 ரன்களுடன் (3 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர். யூசுப் பதான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

சென்னை , டெக்கான் ஏப்ரல் 27

சென்னையை வெ‌ன்றது டெக்கான்

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது.

பூவா-தலையா வென்ற டெக்கான் அணி, முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ‌வி‌க்கெ‌ட்டுக‌ள் இழ‌ப்‌பி‌ற்கு 165 ரன்களை எடுத்தது. ஹெ‌ய்ட‌ன் 49 ர‌ன்களு‌ம், மா‌ர்‌க்கெ‌ல் 41 ர‌ன்களு‌ம் எடு‌த்தன‌ர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்கார்கள் கில்கிறிஸ்டும், கிப்ஸும் சிறப்பாகத் துவக்கினர். கில்கிறிஸ்ட் 19 பந்துகளில் 5 பெளண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து 44 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்றாடிய கிப்ஸ் இறுதி வரை நின்றாடி 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியாக 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து டெக்கான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹெர்ஷல் கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இன்னமும் 16 வயது போல் தான் உணர்கின்றேன்": சச்சின்



இன்னமும் 16 வயது போல் தான் உணர்கின்றேன்":சச்சின்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36-வது பிறந்த நாள். இதனையொட்டி அவர் தந்து அணியான மும்பை இந்தியன்ச் அணியின் சக வீரர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்.தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை தலையேற்று நடத்தி வரும் சச்சின் 36-வது பிறந்த நாளைப் பற்றி குறிப்பிடுகையில் "இன்னமும் 16 வயது போல்தான் உணர்கின்றேன்" என்றார்.தனது இத்தனையாண்டுகால கிரிக்கெட் வாழ்வு பற்றி அவர் கூறுகையில் "சாதனைகளை முறியடிப்பது பெரிய விஷயம் அல்ல, கிரிக்கெட் போட்டிகளை வெல்வதே மகிழ்ச்சியான விஷயம், வெற்றி தரும் உணர்வே அலாதியானது" என்றார்.புள்ளி விரங்களைப் பார்க்கும்போது ஒரு நாள் போட்டிகளில் 16,000 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் சுமார் 12,000 ரன்களையும் குவித்துள்ளார் சச்சின் ஆனால் அது பற்றி அவர் பெரிதாக கூறவில்லை மாறாக, "புள்ளிவிவரங்கள் என்பது ஒரு தனிப்பட்ட வீரர் தன் அணிக்கு செய்த பங்களிப்பையே குறிக்கிறது, தனி நபர் சாதனை ஒரு விஷயமாக இருப்பினும் வெற்றிபெறுவதே முக்கியம்" என்று கூறினார் சச்சின்.பிறந்த நாள் கொண்டாட்டங்களில் டெண்டுல்கரின் மனைவியும் குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்.

மும்பை கொல்கட்டா ஏப்ரல் 27












மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் டெண்டுல்கர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயசூர்யா, டெண்டுல்கர் களம் இறங்கினர். இருவரது ஆட்டத்திலும் அனல் பறந்தது. எதிரணி பந்து வீச்சை இருவரும் விளாசி தள்ளினார்கள். இதனால் ரன் விகிதம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.5.5 ஓவர்களில் 50 ரன்னை தொட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 8.4 ஓவர்களில் 100 ரன்னை எட்டியது. டெண்டுல்கர் 34 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 127 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. டெண்டுல்கர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.டெண்டுல்கர் களத்தில் இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்னுக்கு மேல் குவித்து சாதனை படைக்கும் என்ற நிலையில் இருந்தது ஆனால் அதன் பிறகு மும்பை அணி ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து வந்த ஹர்பஜன்சிங் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் ஜெயசூர்யா 32 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் சுக்லா பந்துவீச்சில் அரிந்தம் கோஷிடம் கேட்ச் கொடுத்து பெலிவியன் திரும்பினார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. டுமினி 18 ரன்னுடனும், திவாரி 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். அபிஷேக் நாயர் 3 ரன்னிலும், பிராவோ 3 ரன்னிலும், ஷிகர் தவான் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுக்லா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, பிராட் ஹாட்ஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 15.2 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கொல்கத்தா அணியில் கேப்டன் மெக்கல்லம் 1 ரன்னிலும், கெய்ல் 12 ரன்னிலும், ஹாட்ஜ் 24 ரன்னிலும், கங்குலி 34 ரன்னிலும், அரிந்தன் ஜோஷ் ரன் எதுவும் எடுக்காமலும், யஷ்பால்சிங் 8 ரன்னிலும், சுக்லா 6 ரன்னிலும், மென்டிஸ், திண்டா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபிஷேக் நாயர், மலிங்கா தலா 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் டெண்டுல்கருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.இந்த போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்தித்த 3-வது தோல்வியாகும்.