ஞாயிறு, 14 மார்ச், 2010

பஞ்சாப்- டில்லி டேர்டெவில்ஸ்

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பஞ்சாப் அணியை வீழ்த்தியது. டில்லி கேப்டன் காம்பிர் 72 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் லீக் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. மொகாலியில் நடந்த போட்டியில், காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, சங்ககராவை கேப்டனாக கொண்ட, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற காம்பிர், பீல்டிங் தேர்வு செய்தார்.
போபரா அரைசதம்:
பஞ்சாப் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் சங்ககரா (17), யுவராஜ் (4), ஜெயவர்தனா (0) என வரிசையாக ஏமாற்றினர். இர்பான் பதான் தன்பங்கிற்கு 21 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபரா அரைசதம் அடித்து (56) ஆறுதல் தந்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.
காம்பிர் அபாரம்:எட்டிவிடும் இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு அதிரடி வீரர்கள் சேவக் (8), தில்ஷன் (0), டிவிலியர்ஸ் (7) என, யாரும் அணியின் ஸ்கோரை உயர்த்த கைகொடுக்கவில்லை. பின் தினேஷ் கார்த்திக் 20 ரன்களுக்கு அவுட்டானார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்பிர், 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டில்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மன்ஹாஸ் 31, மகரூப் 1 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார்.

கருத்துகள் இல்லை: