வெள்ளி, 11 செப்டம்பர், 2009

india vs new zealand
















11/09/2009

கொழும்பு:நெஹ்ரா, யுவராஜ் பந்து வீச்சில் அசத்த, இந்திய அணி நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் முத்தரப்பு தொடரின் பைனலுக்கு சூப்பராக முன்னேறியது. பைனலில் இலங்கை அணியை சந்திக்கிறது. அடுத்தடுத்து இரண்டு லீக் போட்டி களில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, தொடரிலிருந்து பரிதாப மாக வெளியேறியது.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் இரண்டாவது லீக் போட்டி யில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர் கொண்டது. முன்னதாக முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்திருந்த நியூசி லாந்து அணி, கட்டாய வெற்றியை எதிர் நோக்கி களமிறங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி பேட்டிங் தேர்வு செய்தார்.

மிரட்டல் வேகம்:மெக்கலம், ரைடர் நியூசி லாந்து அணிக்கு துவக்கம் தந்தனர். நெஹ்ரா வேகத்தில் அனல் பறந்தது. ரைடர் டக் அவுட்டானார். மெக்கலம் (3) ஏமாற்ற, துவக்கத்திலேயே தடுமாறியது நியூசிலாந்து. டெய்லர் (11) ஏமாற்றி னார்.

யுவராஜ் அசத்தல்:பின்னர் சுழலில் மிரட்டிய யுவராஜ், கப்டில் (22), எலியட் (22) இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக் கினார். மிடில் ஆர்டரில் ஆல்-ரவுண்டர் ஓரம் (24), புரூம் (21) நம்பிக்கை அளிக்க தவறினர். வெட்டோரி (25) ஆறுதல் அளித்தார். டெயிலெண்டர் களான மில்ஸ் (6), பட்லர் (6) சொற்ப ரன்களில் அவுட்டாக, 46.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 155 ரன்கள் எடுத்தது.

சச்சின் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி, துவக்க வீரர் தினேஷ் கார்த்திக் (4) விக்கெட்டை விரைவில் இழந்தது. பின்னர் சச்சின், டிராவிட் ஜோடி சேர்ந் தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தது. சச்சின் அதிரடி காட்ட, டிராவிட் படுமந்தமாக ஆடினார். இந்த ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டிராவிட் (14) அவுட்டானார். மறுமுனை யில் 6 பவுண்டரிகளை விளாசிய சச்சின் (46) அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
சூப்பர் ஜோடி: அடுத்து வந்த யுவராஜ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற் றினார். பின்னர் வந்த ரெய்னா, சூப்பர் சிக்சர் அடித்து தனது ஆட்டத்தை துவக்கினார். இவருடன் இணைந்த கேப்டன் தோனி சிறப்பாக ஆடி னார். இவர்களது பொறுப் பான ஆட்டம் கை கொடுக்க, இந்திய அணி 40.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . தோனி(35), ரெய்னா (45) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை நெஹ்ரா வென்றார்.

பைனல் வாய்ப்பு: முத்தரப்பு தொடரின், முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, நேற்றும் ஏமாற்றியதால் பைனல் வாய்ப்பை இழந்தது. ஒரு லீக் ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, இலங்கையுடன் வரும் 14 ம் தேதி பைனலில் மோத உள்ளது. இதனால் இன்று நடக்கும் இலங்கை, இந்தியா இடையிலான லீக் போட்டி அதிக முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது.

நெஹ்ரா "100':நேற்றைய போட்டியில், நியூசிலாந்தின் மெக்கலமை அவுட்டாக்கிய ஆசிஷ் நெஹ்ரா, ஒரு நாள் அரங்கில் 100 வது விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதுவரை 77 போட்டிகளில் இவர் 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, இந்த இலக்கை எட்டும் 13 வது இந்தியர் என்ற பெருமை பெற்றார் நெஹ்ரா. * இந்திய துவக்க வீரர் தினேஷ் கார்த்திக்கை நேற்று அவுட் செய்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மில்ஸ், ஒரு நாள் அரங்கில் 150 வது விக்கெட்டை கைப்பற்றினார்.

29,500 ரன் நியூசிலாந்துக்கு :எதிரான நேற்றைய போட்டியில், 43 ரன்கள் எடுத்த போது சச்சின் புதிய மைல் கல்லை எட்டினார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என இரண்டிலும் சேர்த்து 29,500 ரன்கள் குவித்தார். இதுவரை டெஸ்டில் 12773, ஒரு நாள் அரங்கில் 16730 ரன்கள் குவித்துள்ளார் சச்சின்.