புதன், 17 மார்ச், 2010

மும்பை இந்தியன்ஸ் vs டில்லி டேர்டெவில்ஸ்

புதுடில்லி : ஐ.பி.எல்., தொடரில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று, தொடரின் 9வது லீக் போட்டி, டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. இதில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, சச்சின் வழிநடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது.
போலார்டு வருகை:பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய டில்லி அணி, 'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியை வீழ்த்திய மும்பை அணி, தொடர்ந்து 2வது வெற்றியை ருசிக்க களம் புகுந்தது. இம்முறை மும்பை அணிக்கு பலம் சேர்க்க, வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ, போலார்டு களமிறங்கினர். 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் காம்பிர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
சச்சின் அதிரடி: முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், அதிரடி துவக்கம் கொடுத்தார். ஜெயசூர்யா (8) ஏமாற்றினார். அடுத்து வந்த ஆதித்யா தாரே (17) ஆறுதல் அளித்தார். பவுண்டரியாக விளாசிய சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் தனது 4வது அரைசதம் கடந்தார். இவர் 32 பந்தில் 11 பவுண்டரி உட்பட 62 ரன்கள் எடுத்து, வெளியேறினார்.
திவாரி அபாரம்: பின்னர் இணைந்த சவுரவ் திவாரி, அம்பாதி ராயுடு ஜோடி ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டது. டில்லி பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, 4வது விக்கெட் டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது, அம்பாதி (34) அவுட்டானார். அபாரமாக ஆடிய திவாரி, ஐ.பி.எல்., அரங்கில் 2வது அரைசதம் அடித்தார். இவர் 37 பந்தில் 61 ரன்கள் (3 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து, ரன்-அவுட்டானார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. டில்லி அணியின் மகரூப், சரப்ஜித் லட்டா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
'டாப்-ஆர்டர்' திணறல்:கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு தில்ஷன் (17), சேவக் (26), டிவிலியர்ஸ் (11), மகரூப் (28), தினேஷ் கார்த்திக் (16) உள்ளிட்ட 'டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் திணறல் துவக்கம் கொடுத்தனர். காயம் காரணமாக கேப்டன் காம்பிர் பேட்டிங் செய்ய வரவில்லை. 'மிடில்-ஆர்டரில்' களம் இறங்கிய மன்ஹாஸ் (1), அமித் மிஸ்ரா (3), சங்வான் (4) ஏமாற்றம் அளித்தனர். மற்ற வீரர்களும் சொதப்ப டில்லி அணி, 16.3 ஓவரில் 120 ரன்களுக்கு சுருண்டு, 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியின் பிராவோ, ஹர்பஜன், ஜெயசூர்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.ஆட்டநாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
காம்பிர் காயம் : நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில், தொடை யின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரண மாக டில்லி அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் மற்றும் பேட்டிங் செய்ய வரவில்லை.

1 கருத்து:

Unknown சொன்னது…

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்