புதன், 29 ஏப்ரல், 2009

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ்








கொல்கத்தா மீண்டும் தோல்வி
டர்பனில் நடைபெர்ற்ற ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயித்த 139 ரனகள் இலக்கை எதிர்த்து பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரனகள் எடுத்து வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் வான் விக் அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.முதல் ஓவரை கெவின் பீட்டர்சன் வீசியது ஆச்சரியம் என்றால் அவர் வீசிய சாதாரண வெளுத்துக் கட்ட வேண்டிய பந்தை அதிரடி மன்னன் பிரண்டன் மெக்கல்லம் நேராக பாயிண்ட் ஃபீல்டர் கையில் கேட்ச் கொடுத்தது அதைவிட அதிசயமாக இருந்தது.அதன் பிறகு கிறிஸ் கெய்ல், பிராட் ஹாட்ஜ் அதிரடி ஆட்டம் ஆடினர். 35 பந்துகளில் இருவரும் 45 ரனகளை சேர்த்தனர். அப்போது பிராட் ஹாட்ஜ் 17 ரன்கள் எடுத்து கும்ளேயிடம் வீழ்ந்தார்.கங்கூலி 8 பந்துகள் திணறொ திணறென்று திணறி 1 ரன் எடுத்து தனக்கு வராத புல் ஷாட்டை ஆடி கேட்ச் கொடுத்தார்.கிறிஸ் கெய்ல் 37 பந்துகளில் 40 ரனகள் எடுத்து ஆட்டமிழந்தபோது 12வது ஓவரில் 70/4 4என்று ஆனது கொல்கத்தா அணி. அதன் பிறகு வான் விக்கும், சாஹாவும் அணியின் எண்ணிக்கையை மெல்ல 110 ரன்களுக்கு உயர்த்தினர். சஹா ஒரு சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்ததாக சுக்லாவும் ஆட்டமிழந்தார். கொல்கட்டா அணி 20 ஓவர்களில் 139 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் பீட்டர்சன் 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். மீண்டும் அனில் கும்ளே 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.தனது இனிங்ஸை தொடங்கியா பெங்களூர் ராயல் சலஞ்சஸ் அணியின் துவக்க வீரர் எஸ்.பி.கோஸ்வாமி 43 ரன்களை குவித்தார். காலிஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 11 ஓவர்களில் 69 ரன்களைச் சேர்த்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.கெவின் பீட்டர்சன் 13 ரன்களையும் வீரத் கோலி 19 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தபோது 16 ஓவர்களில் 107/4 என்று சற்றே பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டது. பிராட் ஹாட்ஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அதன் பிறகு ஆட்டம் நெருக்கமாக சென்றது. 19-வது ஓவரில் 130/5 என்று இருந்தது. பீட்டர்சன் ஆட்டமிழந்த பிறகு மார்க் பவுச்சரும் வான் டெர் மெர்வும் 17 பந்துகளில் 22 ரன்களைச் சேர்த்தனர்.அப்போது 9 ரன்கள் எடுத்த மெர்வ் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை தோன்றியது. இந்த நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் கடைசி ஓவரை கெய்ல் வீசினார். பௌச்சர் 2 பவுண்டரிகளை விளாசி வெற்றி பெற வைத்தார். பௌச்சர் 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து வெற்றி பெற செய்தார்.இதன் மூலம் பெங்களூர் அணி இந்த ஐ.பி.எல்-இல் 2-வது வெற்றியை ஈட்டியுள்ளது. இஷாந்த் ஷர்மா சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக பௌச்சர் தேர்வு செய்யப்பட்டார்.



கருத்துகள் இல்லை: