சென்னையை வென்றது டெக்கான்
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது.
பூவா-தலையா வென்ற டெக்கான் அணி, முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. ஹெய்டன் 49 ரன்களும், மார்க்கெல் 41 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்கார்கள் கில்கிறிஸ்டும், கிப்ஸும் சிறப்பாகத் துவக்கினர். கில்கிறிஸ்ட் 19 பந்துகளில் 5 பெளண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து 44 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்றாடிய கிப்ஸ் இறுதி வரை நின்றாடி 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியாக 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து டெக்கான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹெர்ஷல் கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மனசு
5 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக