பஞ்சாப் அணி 3 ரன்னில் வெற்றி
ஐ.பி.எல்., தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் யுவராஜின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி வாய்ப்பை வீணாக்கியது.
தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. டர்பனில் நேற்று இரவு நடந்த 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
துவக்கம் மோசம்: பஞ்சாப் அணி திணறல் துவக்கம் கண்டது. கோயல் (12), போபரா(6) விரைவில் வெளியேறினர். கேப்டன் யுவராஜ்(10) மீண்டும் ஏமாற்றினார். ஜெயசூர்யா சுழலில் ஜெயவர்தனா(7) சிக்க, 4 விக்கெட்டுக்கு 52 ரன் எடுத்து தத்தளித்தது. உறுதியாக போராடிய சங்ககரா அணியை மீட்டார். கடைசி கட்டத்தில் ஜாகிர், மலிங்கா விக்கெட் வீழ்த்தியதோடு ரன்களையும் விட் டுக் கொடுக்கவில்லை. இதனால் ரன் விகிதம் குறைந்து போனது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டும் எடுத்தது. சங்ககரா(45) அவுட்டாகாமல் இருந்தார்.
சச்சின் ஏமாற்றம்: போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணி படுமோசமான துவக்கம் கண்டது. இர்பான் வீசிய முதல் பந்திலேயே ஜெயசூர்யா(0) அவுட்டானார். மாலிக் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் சச்சின்(1) வெளியேறினார். தவான் (3), பிராவோ(15) ஏமாற்ற, 4 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதற்கு பின் டுமினி, அபிஷேக் நாயர் இணைந்து போராடினர். நாயர் 15 ரன்கள் எடுத்தார். டுமினி அரைசதம் கடந்தார்.6 பந்தில் 12 ரன்: கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் மும்பை அணி வெற்றி என்ற பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.அப்துல்லா அற்புதமாக பந்துவீசினார். முதல் 3 பந்தில் 5 ரன்கள் எடுக்கப் பட்டது. 4வது பந்தில் டுமினி 59 ரன்களுக்கு அவுட்டாக, நம்பிக்கை தகர்ந்தது. மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து பரிதாப தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சங்ககரா தேர்வு
செய்யப்பட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக