இன்னமும் 16 வயது போல் தான் உணர்கின்றேன்":சச்சின்
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36-வது பிறந்த நாள். இதனையொட்டி அவர் தந்து அணியான மும்பை இந்தியன்ச் அணியின் சக வீரர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்.தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை தலையேற்று நடத்தி வரும் சச்சின் 36-வது பிறந்த நாளைப் பற்றி குறிப்பிடுகையில் "இன்னமும் 16 வயது போல்தான் உணர்கின்றேன்" என்றார்.தனது இத்தனையாண்டுகால கிரிக்கெட் வாழ்வு பற்றி அவர் கூறுகையில் "சாதனைகளை முறியடிப்பது பெரிய விஷயம் அல்ல, கிரிக்கெட் போட்டிகளை வெல்வதே மகிழ்ச்சியான விஷயம், வெற்றி தரும் உணர்வே அலாதியானது" என்றார்.புள்ளி விரங்களைப் பார்க்கும்போது ஒரு நாள் போட்டிகளில் 16,000 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் சுமார் 12,000 ரன்களையும் குவித்துள்ளார் சச்சின் ஆனால் அது பற்றி அவர் பெரிதாக கூறவில்லை மாறாக, "புள்ளிவிவரங்கள் என்பது ஒரு தனிப்பட்ட வீரர் தன் அணிக்கு செய்த பங்களிப்பையே குறிக்கிறது, தனி நபர் சாதனை ஒரு விஷயமாக இருப்பினும் வெற்றிபெறுவதே முக்கியம்" என்று கூறினார் சச்சின்.பிறந்த நாள் கொண்டாட்டங்களில் டெண்டுல்கரின் மனைவியும் குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக