யூசுப் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான்அதிரடியாக அரைசதம் கடக்க, நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.தென் ஆப்ரிக்காவில் 2வது ஐ.பி.எல்.,”டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
நேற்று நடந்த 18 வது லீக் போட்டியில் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சேவக்கின் டில்லி டேர்டெவில்சை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டில்லி அணி, பேட்டிங் தேர்வு செய்தது.டிவிலியர்ஸ் அரை சதம்: டில்லி அணிக்கு துவக் கத்தில் காம்பிர் (8), சேவக் (16) ஏமாற்றினர். அடுத்து வந்த டிவிலியர்ஸ் பொறுப் புடன் ஆடினார்.
ஆனால் இவருக்கு மிடில் ஆர்டர் வீரர்களான தில்ஷன் (7), தினேஷ் கார்த்திக் (4)ஒத்துழைப்பு தரவில்லை. 1 சிக்சர் 5 பவுண்டரி உட்பட அரை சதம் பதிவு செய்த டிவிலியர்ஸ் (50) ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வெட்டோரி (29), மன்காஸ் (23*) ஆறுதல் அளிக்க, டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
மிஸ்ரா மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, குய்னே (4) விக்கெட்டை விரைவில் இழந்தது.
சுழற் பந்து வீச்சில் மிரட்டிய டில்லி வீரர் அமித் மிஸ்ரா, பால் வால்தட்டி (1), ரவீந்திர ஜடேஜா (16), வார்ன் (0) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி, ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
பதான் வாணவேடிக்கை: ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் பார்முக்கு திரும்பிய ஸ்மித் பொறுப்புடன் ஆடினார்.
இவருடன் இணைந்த யூசுப் பதான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். சிக்சர்களாக விளாசித் தள்ளிய யூசுப் வெற்றிநாயகனாக ஜொலித்தார்.
ராஜஸ்தான் அணி 18.3ஓவரில் 147 ரன்கள் அடித்து வெற்றியை எட்டியது. ஸ்மித் 44, யூசுப் பதான் 62 ரன்களுடன் (3 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர். யூசுப் பதான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
மனசு
5 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக