சனி, 21 மார்ச், 2009

இந்தியா - நியுசிலாந்து - டெஸ்ட் போட்டி


















ஹாமில்டன்:தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர் கிறது। ஹாமில்டன் டெஸ்டில் ஹர்பஜன் 6 விக்கெட் கைப்பற்ற, நியூசிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது। இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது।நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது। முதல் போட்டி ஹாமில்டனில் நடந்தது। முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 279, இந்தியா 520 ரன்கள் எடுத்தன। 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது। ஹர்பஜன் அபாரம்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது। முன்னணி வீரர் ரோஸ் டெய்லர் (4) சோபிக்க தவறினார்। அதிரடி ரைடர்(21) இம்முறை ஹர்பஜன் சுழலில் சிக்கினார்। அடுத்து வந்த பிராங்க்ளினும் (14) நியூசிலாந்துக்கு கைகொடுக்கவில்லை. ஒரு புறம் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிதானமாக ஆடிய பிளின், டெஸ்ட் அரங்கில் 3 வது அரை சதம் கடந்தார். மெக்கலம் ஆறுதல்: ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க, ஹர்பஜன் தொடர்ந்து பந்து வீச்சில் மிரட்டி னார். இவரது சுழலில் நியூசிலாந்து நிலை குலைந்தது. 10 பவுண்டரி களுடன் 67 ரன்கள் சேர்த்த பிளின், இவரிடம் விக்கெட்டை பறிகொடுத் தார். "மிடில் ஆர்டர்' வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, மெக்கலம் தனி ஆளாகப் போராடி னார். வெட்டோரி (21), ஓ பிரையன் (14) ஓரளவு தாக்குப் பிடிக்க, மெக்கலம் டெஸ்ட் அரங்கில் 13 வது அரை சதம் கடந்தார். இவர் 84 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி இரண் டாவது இன்னிங்சில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியாவுக்கு 39 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எளிய வெற்றி: எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு காம்பிர், டிராவிட் அதிரடி துவக்கம் தந்தனர். 5.2 ஓவர்களில் 39 ரன்கள் குவித்த இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்பிர் (30), டிராவிட் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சச்சின் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி வரும் 26 ம் தேதி நேப்பியரில் துவங்குகிறது. சச்சின், டிராவிட்டுக்கு அர்ப்பணிப்பேன்:நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, சச்சின், டிராவிட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்கிறார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" 33 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விஷயம். சச்சின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவிர, பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். டாஸ் ஜெயித்த பின் பீல்டிங் தேர்வு செய்தது நல்ல விஷயமாக அமைந்தது. இந்திய பந்துவீச்சாளர்களும் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி எனது முடிவை உறுதி படுத்தினர். அடுத்து இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயம். சச்சினுடன் இணைந்து விளையாடுவது சிறப்பான அனுபவம். அவர் நன்றாக விளையாடா விட்டாலும், விளையாடி னாலும் அணியின் வெற்றியில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அவர் அளிக்கும் ஆலோச னைகள் அணிக்கு புத்துணர்வு அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. எனது தலைமையில் சிறப்பான அணி அமைந்திருக்கிறது. அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சரியான அளவில் உள்ளனர். ஒவ்வொரு வீரரும் பொறுப்புணர்ந்து ஆடி வருகின் றனர். தொடரை வெல்லும் பட்சத்தில், சீனியர் வீரர்களான சச்சின், டிராவிட்டுக்கு வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,'' என்றார். கவாஸ்கருக்கு பின்ஹாமில்டன் டெஸ்டின் வெற்றியின் மூலம், 33 ஆண்டு களுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் அசத்தியுள்ளது இந்திய அணி. கடந்த 1976 ம் ஆண்டு ஆக்லாந்தில் நடந்த போட்டியில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதற்கடுத்து 33 ஆண்டுகளுக்குப் பின் தோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது தான் நியூசிலாந்தில் வெற்றிக் கனியை எட்டிப் பறித்துள்ளது. 99 வது வெற்றி * ஹாமில்டன் வெற்றி, டெஸ்ட் அரங்கில் இந்தியா பெறும் 99 வது வெற்றி. இதுவரை 428 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி, இந்த இலக்கை எட்டி உள்ளது. * நியூசிலாந்து மண்ணில் இந்தியா விளையாடியுள்ள 19 டெஸ்ட் போட்டிகளில், 5 வது வெற்றி இது. * நேற்று 10 விக்கெட் வித்தி யாசத்தில் பெற்ற வெற்றியே, ஹாமில்டனில் நியூசிலாந்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் சிறப்பான வெற்றியாகும். இதுவரை 4 டெஸ்டில் நியூசிலாந்துடன் இந்தியா இங்கு மோதியுள்ளது. இதில், கடந்த 2002-03 ம் ஆண்டு நடந்த போட்டியில், நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. மற்ற இரண்டு போட்டிகள் "டிராவில்' முடிந்தன. 12 வது முறை * டெஸ்ட் அரங்கில் ஆட்ட நாயகன் விருதை 12 வது முறையாக கைப்பற்றினார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். தவிர, நியூசிலாந்துக்கு எதிராக இது 3 வது முறை (1995, சென்னை டெஸ்ட்), (1999, ஆமதாபாத்). * சச்சின் டெஸ்ட் அரங்கில் காலடி வைத்த பின், இந்திய அணி வெற்றி பெற்ற 51 போட்டிகளில், சச்சினின் 16 சதமும் அடங்கும். சூப்பர் ஜோடி:இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றியை நேற்று பறித்தது, நியூசிலாந்தின் மெக்கலம், ஓ பிரையன் ஜோடி. 9 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்தது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு 39 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. இந்த ஜோடியை விரைவில் வெளியேற்றி இருந்தால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருக்கும். சபாஷ் தோனி:இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக ஜொலிக் கிறார் தோனி. இவரது தலைமையில் விளையாடிய 6 டெஸ்டில் 5 ல் வெற்றி, ஒரு போட்டி "டிராவில்' முடிந்துள்ளது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தினார். தற்போது 33 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி, நியூசிலாந்தில் டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது.









கருத்துகள் இல்லை: