நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா, நியூஸீலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 84 ரன்கள் எடுத்து அணியை அபாரமாக தலைமையேற்று நடத்திய தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.டக்வொர்த் முறைப்படி 38 ஓவர்களில் 278 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நியூஸீலாந்து ஓவருக்கு 9.42 ரன்கள் தேவை என்ற நிலையில் 111/4 என்று இருந்த போது மீண்டும் மழை பெய்தது. ஆட்டம் துவங்கும் போது 28 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 216 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதாவது 42 பந்துகளில் சுமார் 112 ரன்களை அடிக்குமாறு டக்வொர்த் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூஸீலாந்து கடைசியில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.நியூஸீ. அணியில் குப்டில் மட்டுமே சிறப்பாக விளையாடி 70 பந்துகளில் 5 பவுண்டரிஅக்ளுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.நியூஸீலாந்து பேட்ஸ்மென்களால் இன்று ஒரு சிக்சரைக் கூட அடிக்க முடியவில்லை.துவக்கத்தில் பிரவீண் குமார் தனது சாதுரியமான பந்து வீச்சினால் மெக்கல்லம், மற்றும் ரைடரை வீழ்த்தினார். மேலும் ஜாகீர் கான் ஒரு முனையில் இறுக்கினார். இதனால் ரன் எடுப்பது நியூஸீலாந்து அணிக்கு துவக்கம் முதலே பிரச்சனையாக இருந்தது.ஆனால் டெய்லரும், குப்டில் அடுத்த 8 ஓவர்களில் 58 ரன்களை விளாசினர். அப்போது 31 ரன்கள் எடுத்திருந்த டெய்லர், யூசுஃப் பத்தான் பந்தில் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.81/3 என்ற ஸ்கோரிலிருந்து கிராண்ட் எலியட்டும், குப்டிலும் ஸ்கோரை 111 ரன்களுக்கு உயர்த்திய போது எலியட் சேவாகின் அபாரமான த்ரோவிற்கு ரன் அவுட் ஆனார்.அப்போது மழை பிடிக்க துவங்கியது. மீண்டும் வந்த போது இமாலய இலக்கௌ நிர்ணயிக்கப்பட்டது.இதில் வரிசையாக 5 விக்கெட்டுகளை இழந்தனர் நியூஸீலாந்து வீரர்கள்.ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீண் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜாகீர் கான், யுவ்ராஜ், யூசுஃப் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
மனசு
5 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக