ஞாயிறு, 8 மார்ச், 2009

சாதனைகள் பல கண்ட இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது











சாதனைகள் பல கண்ட இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது। நியூசிலாந்து சென்றுள்ள தோனி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. "டாஸ்" வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. மீதமுள்ள போட்டிகளில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். இதனால் பிரண்டன் மெக்கலம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (163), யுவராஜ் சிங் (87), கேப்டன் தோனி (68), சுரேஷ் ரெய்னா (38) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்" பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர். இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. இது ஒருநாள் அரங்கில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். கடந்த 2007ம் ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்தது. தவிர நியூசிலாந்து மண்ணில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவாகும். இப்போட்டியில் சதம் கடந்த சச்சின் ஒருநாள் அரங்கில் அதிக சதம் (43வது) கடந்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதுவரை 425 போட்டிகளில் பங்கேற்ற இவர் 43 சதம், 91 அரைசதம் உட்பட 16684 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறார். பின்னர் கடின இலங்கை விரட்டிய நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 334 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜெசி ரைடர் (105), பிரண்டன் மெக்கலம் (71), கைல் மில்ஸ் (54), டிம் சவுத்தி (32) ஓரளவு நம்பிக்கை தந்தனர். இந்தியா சார்பில் ஜாகிர் கான், யுவராஜ், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் வரும் 11ம் தேதி நடக்கிறது


























கருத்துகள் இல்லை: