கும்ளே அணி வெற்றி:
யுவராஜ் "ஹாட்ரிக்' வீண்
நெஞ்சம் படபடத்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவரை கலக்கலாக வீசிய பிரவீண் குமார் வெற்றிக்கு வித்திட்டார். பஞ்சாப் சார்பில் கேப்டன்யுவராஜின் "ஹாட்ரிக்' சாதனை, அதிரடி அரைசதம் வீணானது.தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
நேற்று இரவு டர்பனில் நடந்த 24வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சால ஞ்ர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கும்ளே, பேட்டிங் தேர்வு செய்தார்.துவக்கம் மோசம்: பெங்களூரு அணி மோசமான துவக்கம் கண்டது. இர்பான் பதான் வீசிய முதல் ஓவரிலேயே ஜெசி ரைடர்(2) அவுட்டானார். யுவராஜ் அபாரம்: இதற்கு பின் யுவராஜ் அசத்தினார். 12வது ஓவரின் 5வது பந்தில் உத்தப்பாவை(19)வெளியேற்றினார். 6வது பந்தில் காலிஸ்(27) போல்டானார். இவரது அடுத்த ஓவரின்(14வது) முதல் பந்தில் அனுபவ பவுச்சர்(2) எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டாக, "ஹாட்ரிக்' சாதனை படைத்தார். வாண்டர் மெர்வி 35 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது.
அதிரடி அரைசதம்:
சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் யுவராஜ், கோயல் இணைந்து சூப்பர் துவக்கம் தந்தனர். வழக்கம் போல சிக்சர் மழை பொழிந்த யுவராஜ் 50 ரன்களுக்கு(3 பவுண்டரி, 4 சிக்சர்) கும்ளே சுழலில் அவுட்டானார். கோயல் 20 ரன்கள் எடுத்தார். கேடிச்(3), ஜெயவர்தனா(19), சங்ககரா(17) அதிக நேரம் நீடிக்கவில்லை.6 பந்தில் 13 ரன்: கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. பிரவீண் குமார் பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்தில் இர்பான் பதான் பவுண்டரி அடித்தார். 3வது பந்தில் ரன் இல்லை.நான்காவது பந்தில் இர்பான்(12) அவுட் டானார். ஐந்தாவது பந்தில் சாவ்லா(3)போல்டானார். 6வது பந்தில் ரன் எடுக்க இயலவில்லை. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து பரிதாப தோல்வி அடைந்தது. புதிய கேப்டன் கும்ளே, பெங்களூரு அணிக்கு வெற்றிப் பாதையை காட்டியுள்ளார். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் தட்டிச் சென்றார்.
மனசு
5 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக