சனி, 2 மே, 2009

சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனக்டு இரண்டாவது வெற்றியை ஈட்டியது. தமிழக வீரர் பாலாஜி சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க வீரர் ஸ்மித் 2 ரன்னில் (5 பந்து) ஆட்டம் இழந்ததும், சென்னை அணியின் உற்சாகம் ஆரம்பமானது. அதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்டுகள் சென்னை வீரர்கள் வீழ்த்திய வண்ணம் இருந்தனர். அந்த அணியின் அதிரடி மன்னன் யூசுப் பதான், சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதப்பட்டது. அவரை 20 ரன்களில் (13 பந்து, 3 பவுண்டரி) பாலாஜி வெளியேற்றினார். அவர் ஆட்டம் இழந்ததும் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை தகர்ந்தது. இறுதிகட்டத்தில் சென்னை பவுலர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார்கள்.முடிவில் 19.3 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 126 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. காயம் காரணமாக ராஜஸ்தான் அணியில் கம்ரன்கான் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 37 ரன்னும், குவீனி 28 ரன்னும் எடுத்தனர்.சென்னை அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய தமிழக வீரர் பாலாஜி 4 விக்கெட்டுகளும், அல்பி மோர்கல், ஓரம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முன்னதாக பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தான் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

கருத்துகள் இல்லை: