புதன், 17 மார்ச், 2010

மும்பை இந்தியன்ஸ் vs டில்லி டேர்டெவில்ஸ்

புதுடில்லி : ஐ.பி.எல்., தொடரில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று, தொடரின் 9வது லீக் போட்டி, டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. இதில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, சச்சின் வழிநடத்தும் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது.
போலார்டு வருகை:பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய டில்லி அணி, 'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியை வீழ்த்திய மும்பை அணி, தொடர்ந்து 2வது வெற்றியை ருசிக்க களம் புகுந்தது. இம்முறை மும்பை அணிக்கு பலம் சேர்க்க, வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ, போலார்டு களமிறங்கினர். 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் காம்பிர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
சச்சின் அதிரடி: முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், அதிரடி துவக்கம் கொடுத்தார். ஜெயசூர்யா (8) ஏமாற்றினார். அடுத்து வந்த ஆதித்யா தாரே (17) ஆறுதல் அளித்தார். பவுண்டரியாக விளாசிய சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் தனது 4வது அரைசதம் கடந்தார். இவர் 32 பந்தில் 11 பவுண்டரி உட்பட 62 ரன்கள் எடுத்து, வெளியேறினார்.
திவாரி அபாரம்: பின்னர் இணைந்த சவுரவ் திவாரி, அம்பாதி ராயுடு ஜோடி ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டது. டில்லி பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, 4வது விக்கெட் டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது, அம்பாதி (34) அவுட்டானார். அபாரமாக ஆடிய திவாரி, ஐ.பி.எல்., அரங்கில் 2வது அரைசதம் அடித்தார். இவர் 37 பந்தில் 61 ரன்கள் (3 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து, ரன்-அவுட்டானார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. டில்லி அணியின் மகரூப், சரப்ஜித் லட்டா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
'டாப்-ஆர்டர்' திணறல்:கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு தில்ஷன் (17), சேவக் (26), டிவிலியர்ஸ் (11), மகரூப் (28), தினேஷ் கார்த்திக் (16) உள்ளிட்ட 'டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் திணறல் துவக்கம் கொடுத்தனர். காயம் காரணமாக கேப்டன் காம்பிர் பேட்டிங் செய்ய வரவில்லை. 'மிடில்-ஆர்டரில்' களம் இறங்கிய மன்ஹாஸ் (1), அமித் மிஸ்ரா (3), சங்வான் (4) ஏமாற்றம் அளித்தனர். மற்ற வீரர்களும் சொதப்ப டில்லி அணி, 16.3 ஓவரில் 120 ரன்களுக்கு சுருண்டு, 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியின் பிராவோ, ஹர்பஜன், ஜெயசூர்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.ஆட்டநாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
காம்பிர் காயம் : நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில், தொடை யின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரண மாக டில்லி அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் மற்றும் பேட்டிங் செய்ய வரவில்லை.

ஞாயிறு, 14 மார்ச், 2010

சென்னை , டெக்கான் ஏப்ரல் 27

சென்னையை வெ‌ன்றது டெக்கான்

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது.

பூவா-தலையா வென்ற டெக்கான் அணி, முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ‌வி‌க்கெ‌ட்டுக‌ள் இழ‌ப்‌பி‌ற்கு 165 ரன்களை எடுத்தது. ஹெ‌ய்ட‌ன் 49 ர‌ன்களு‌ம், மா‌ர்‌க்கெ‌ல் 41 ர‌ன்களு‌ம் எடு‌த்தன‌ர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்கார்கள் கில்கிறிஸ்டும், கிப்ஸும் சிறப்பாகத் துவக்கினர். கில்கிறிஸ்ட் 19 பந்துகளில் 5 பெளண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து 44 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்றாடிய கிப்ஸ் இறுதி வரை நின்றாடி 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியாக 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து டெக்கான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹெர்ஷல் கிப்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மும்பை , கொல்கட்டா ஏப்ரல் 27

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் டெண்டுல்கர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயசூர்யா, டெண்டுல்கர் களம் இறங்கினர். இருவரது ஆட்டத்திலும் அனல் பறந்தது. எதிரணி பந்து வீச்சை இருவரும் விளாசி தள்ளினார்கள். இதனால் ரன் விகிதம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.5.5 ஓவர்களில் 50 ரன்னை தொட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 8.4 ஓவர்களில் 100 ரன்னை எட்டியது. டெண்டுல்கர் 34 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 127 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. டெண்டுல்கர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.டெண்டுல்கர் களத்தில் இருக்கும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்னுக்கு மேல் குவித்து சாதனை படைக்கும் என்ற நிலையில் இருந்தது ஆனால் அதன் பிறகு மும்பை அணி ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து வந்த ஹர்பஜன்சிங் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் ஜெயசூர்யா 32 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் சுக்லா பந்துவீச்சில் அரிந்தம் கோஷிடம் கேட்ச் கொடுத்து பெலிவியன் திரும்பினார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. டுமினி 18 ரன்னுடனும், திவாரி 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். அபிஷேக் நாயர் 3 ரன்னிலும், பிராவோ 3 ரன்னிலும், ஷிகர் தவான் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுக்லா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, பிராட் ஹாட்ஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 15.2 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கொல்கத்தா அணியில் கேப்டன் மெக்கல்லம் 1 ரன்னிலும், கெய்ல் 12 ரன்னிலும், ஹாட்ஜ் 24 ரன்னிலும், கங்குலி 34 ரன்னிலும், அரிந்தன் ஜோஷ் ரன் எதுவும் எடுக்காமலும், யஷ்பால்சிங் 8 ரன்னிலும், சுக்லா 6 ரன்னிலும், மென்டிஸ், திண்டா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபிஷேக் நாயர், மலிங்கா தலா 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் டெண்டுல்கருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.இந்த போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்தித்த 3-வது தோல்வியாகும்.

பஞ்சாப்- டில்லி டேர்டெவில்ஸ்

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பஞ்சாப் அணியை வீழ்த்தியது. டில்லி கேப்டன் காம்பிர் 72 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் லீக் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. மொகாலியில் நடந்த போட்டியில், காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, சங்ககராவை கேப்டனாக கொண்ட, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற காம்பிர், பீல்டிங் தேர்வு செய்தார்.
போபரா அரைசதம்:
பஞ்சாப் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் சங்ககரா (17), யுவராஜ் (4), ஜெயவர்தனா (0) என வரிசையாக ஏமாற்றினர். இர்பான் பதான் தன்பங்கிற்கு 21 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபரா அரைசதம் அடித்து (56) ஆறுதல் தந்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.
காம்பிர் அபாரம்:எட்டிவிடும் இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு அதிரடி வீரர்கள் சேவக் (8), தில்ஷன் (0), டிவிலியர்ஸ் (7) என, யாரும் அணியின் ஸ்கோரை உயர்த்த கைகொடுக்கவில்லை. பின் தினேஷ் கார்த்திக் 20 ரன்களுக்கு அவுட்டானார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்பிர், 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டில்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மன்ஹாஸ் 31, மகரூப் 1 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார்.

முதல் முறையாக "நம்பர்-1' இடம்

மும்பை: மும்பை டெஸ்டில் சூப்பராக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. தவிர தனது டெஸ்ட் வரலாற்றில் 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. ஆட்ட, தொடர் நாயகன் என விருதுகளையும் சேவக் வென்றார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜாகிர் வேகத்தில் மிரட்ட, இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இன்னிங்ஸ், 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர 1932ல் டெஸ்ட் விளையாட துவங்கிய இந்திய அணி, 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடம் பெற்றது. தற்போது இந்தியா 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்கா உள்ளது.
இப்போட்டியில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
---------------------
கனவு நனவானது: தோனி
"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.
--------
ஜனாதிபதி பாராட்டு
டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர், தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.
--------
கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:
முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.